திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 டிசம்பர் 2023 (13:43 IST)

சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை: அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை..!

Rain
சென்னையின் முக்கிய பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 
 
தேனாம்பேட்டை, மயிலாப்பூர், பாண்டி பஜார், தியாகராய நகர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது தான் சென்னை கன மழையிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva