செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (07:46 IST)

எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த திடீர் சோதனை: லட்சக்கணக்கில் அபராதம் வசூல்!

train
எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென நடந்த சோதனையை அடுத்து இலட்சக்கணக்கில் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணம் செய்வதாகவும் இந்திய ரயில்வே துறைக்கு தகவல் வந்தது. 
 
இதனையடுத்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 683 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
 
அதேபோல் பயண டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ரயில்வே அதிகாரிகளால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3.38 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன