அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்: நீதிபதிகள் அதிரடி உத்தரவு
உலகின் நம்பர் ஒன் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு நீதிபதிகள் ரூபாய் 200 கோடி அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமேசான் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 200 கோடி ரூபாய் அபராதத்தை தேசிய கம்பெனிகள் சட்டம் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இன்று உறுதி செய்துள்ளது.
மேலும் அமேசான் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட 200 கோடி ரூபாய் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் அசோக் குமார் மிஸ்ரா ஆகியோரும் உத்தரவிட்டனர்
விதிகளை மீறி Future குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.