புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

கோவை - ஷீரடி தனியார் ரயில்: இன்று முதல் தொடக்கம்!

kovi sheeradi
கோவை - ஷீரடி தனியார் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
கோவையிலிருந்து ஷீரடிக்கு தனியார் ரயில் சேவை இன்று முதல் இயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவில் முதல்முறையாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட கோவை முதல் ஷீரடி வரையிலான சிறப்பு ரயில் இன்று தனது முதல் பயணத்தை தொடங்க உள்ளது. இந்த ரயில் வாரம் ஒரு முறை மட்டும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனியார் வசம் கொடுக்கப்படும் இந்த ரயிலில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ரயில்வே துறை ஆய்வு செய்துள்ளது. உணவு வசதி, செல்போன் சார்ஜ் வசதி மற்றும் படுக்கை வசதி ஆகியவற்றை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர் 
கோவையில் இருந்து சீரடி செல்ல ரயில்வேதுறையின் ரயிலில் ஸ்லீப்பர் கட்டணம் 1280 என்றும் ஆனால் தனியார் நிறுவனம் வசூலிக்கும் கட்டணம் 2,500 என்றும் கூறப்படுவதால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது