புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 11 ஜூன் 2022 (12:47 IST)

ஆபாச படம் பார்க்க பயன்படுத்தப்படும் ரயில்வே வைஃபை! – அதிர்ச்சி தகவல்!

Free Wifi
இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வைஃபை அளிக்கப்படும் நிலையில் அதை பயன்படுத்தி அதிக ஆபாச படங்கள் பார்க்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் இலவசமாக இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் ரயில்வயர் இலவச வைஃபை சேவை அளிக்கப்படுகிறது. இந்த சேவையை முதல் அரை மணி நேரத்திற்கு இலவசமாக பெற முடியும்.

இந்தியா முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், ரயில் சந்திப்புகளில் இந்த இணைய வசதி உள்ள நிலையில் இந்த இணைய வசதி கொண்டு பெரும்பாலும் ஆபாச படங்கள் பார்க்கப்படுவதாகவும், தரவிறக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தெற்கு மத்திய ரெயில்வேயின் கீழ் வரும் செகந்திராபாத் ரயில் நிலையம் ஆபாச படங்களை இலவச வைஃபை மூலம் பார்ப்பதில் அதிகபட்சமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ஐதராபாத், விஜயவாடா மற்றும் திருப்பதி ரயில் நிலையங்கள் உள்ளன.

பயணிகளின் பொழுதுபோக்கிற்காகவும், அவசர தேவைக்காகவும் வழங்கப்படும் இலவச வைஃபை சேவையில் ஆபாசப்படம் அதிகளவில் பார்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.