வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (22:02 IST)

பாஜக தலைவர் ஜேபி. நட்டாவின் பேச்சுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு!

Priyanka Gandhi
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதது. இதில், ஆளுங்கட்சியாக பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட  முக்கிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால் பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் விலகிவிடும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், பிரதமரின் ஆசீர்வாதத்தை மக்கள் இழப்பர் என்று ஜேபி. நட்டா பேசியுள்ளது மிரட்டுவதாகும்.  இம்மா நிலத்தின் எதிர்காலம், பெருமை, மற்றும் செழிப்பிற்கு ஒவ்வொருவரும் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியினர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், ‘’ஜேபி. நட்டா கன்னடர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கர நாடக மாநிலத்திற்கு மோடி தேவையில்லை என்று நிரூபிக்க வேண்டிய நேரம்’’ என்று கூறியுள்ளனர்.