1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EVKS says about bjp leader annamalai

பாதயாத்திரை முடிந்ததும் அண்ணாமலை காணாமல் போய்விடுவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

பாதயாத்திரை
பாதயாத்திரை முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என ஈவிகேஎஸ்  இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  
 
ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தமிழகத்தில் மு க ஸ்டாலின் நல்லாட்சி கொடுத்து வருகிறார் என்றும் ஆனால் ஆளுநர் அவருக்கு இடைஞ்சல் கொடுத்து வருகிறார் என்றும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செய்யவில்லை என்றும் பஸ் பயணம் தான் செய்து வருகிறார் என்றும் இந்த பயணம் முடிந்தவுடன் அவர் காணாமல் போய்விடுவார் என்றும் தெரிவித்தார்.  
 
மேலும் அதிமுக மாநாட்டை புளியோதரை மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் 60 ஆயிரம் பேர் கலந்து கொண்டதை 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
''நான் ஒரு அரசுப் பள்ளி மாணவன்''...'சந்திரயான்-3' திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வீடியோ வைரல்