திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:23 IST)

உங்களால் ஐஏஎஸ் தேர்வு எழுதமுடியுமா? ஆளுனரை தேர்தலில் போட்டியிட சொன்ன உதயநிதிக்கு பதிலடி..!

ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்த நிலையில்  உங்களால் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார் 
 
சமீபத்தில் ஆளுநர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த அமைச்சர் உதயநிதி ஆளுநர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் பிறகு அவர் நினைத்ததை செய்யட்டும் என்று கூறியிருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பதவியை துறந்து விட்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று விட்டால் நான் அரசியலில் வீட்டை விலகுகிறேன் என்று கூறியுள்ளார். 
 
மேலும் உதயநிதி ஸ்டாலின் சாதாரண டி.என்.பி.எஸ்.சி அல்லது சிவில் சர்வீஸ் தேர்வு இல்லை என்றாலும் குரூப் 4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று அதன் பிறகு பேசட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
அண்ணாமலையின் இந்த பதிலடிக்கு உதயநிதி ஸ்டாலின் என்ன கூற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva