தொடர்புடைய செய்திகள்
- இந்தியர்கள் நிலவில் கால் பதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: கமல்ஹாசன் வாழ்த்து..!
- நிலவுக்கும் மனிதனை அனுப்புவதே இந்தியாவின் அடுத்த இலக்கு: பிரதமர் மோடி
- கடைசி 4 நிமிடங்கள் முக்கியமானது.. ‘சந்திராயன் 3’ குறித்து விஞ்ஞானிகள் தகவல்..!
- இந்தியா, ரஷ்யாவை அடுத்து நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்.. தேதி அறிவிப்பு..!
- 'சந்திரயான் 3 நிச்சயம் வெற்றி பெறும்' -நடிகர் மாதவன்
நிலவில் விண்வெளி ஆய்வகம்.. மனிதர்கள் குடியேற ஆய்வுகள்: மயில்சாமி அண்ணாத்துரை..!
நிலவில் விண்வெளி ஆய்வுகள் அமைக்கவும், நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் இந்தியா முடிவு செய்துள்ளது என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
நிலவில் ஒரு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் என்றும் விண்வெளி ஆய்வில் விஞ்ஞானிகளிடம் ஒருமித்த கருத்து உள்ளது என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மேலும் மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்காக பல்வேறு ஆய்வு நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தற்போது அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சரியாக இல்லை என்றும் பூமியின் சுற்றுப் பாதையில் விண்வெளி ஆய்வு மையம் இருப்பதால் பராமரிப்பு செலவு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார் அதனால் தான் நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்
நிலவுக்கு செல்வதற்கான நிபுணத்துவத்தை இந்தியா அடைந்து விட்டது என்றும் சந்திராயன் 3 வெற்றி, இருக்கும் வசதிகளை கொண்டு படிப்படியாக திட்டமிடப்பட்டது என்றும் நிலவை மனிதன் கைப்பற்றுவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
