தொடர்புடைய செய்திகள்
- சட்டவிரோதமாக 77 பார்களை நடத்த அனுமதித்தது யார் ?- அன்புமணி ராமதாஸ்
- கழிவுநீர்த் தொட்டி சுத்திகரிப்பு பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் கிரிமினல் நடவடிக்கை - அமைச்சர் கே.என். நேரு
- முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் என்பதும் காதில் பூ சுற்றும் வேலை: எடப்பாடி பழனிசாமி
- அற்ப அரசியலை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் காட்ட வேண்டாம் - அண்ணாமலை
- மணல் கொள்ளையர்களின் கொடூர தாக்குதல்.. கண்டுகொள்ளாத திமுக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்..!
ஒவ்வொரு தந்தையும் மது பழக்கத்தை கைவிடவேண்டும் - விஜயகாந்த்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்னராஜாகுப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமி விஷ்ணுப்பிரியா(16). கூலித்தொழிலாளியான தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார் அந்த சிறுமி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வேலூர், சின்னராஜாகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா,தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மதுபாட்டில்கள் மீது சிறுமியின் புகைப்படத்தை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மது பழக்கத்தை கைவிடவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
