வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (12:30 IST)

முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் என்பதும் காதில் பூ சுற்றும் வேலை: எடப்பாடி பழனிசாமி

முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் என்பது காதில் பூச்சூட்டும் வேலை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 
 
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கெமாட்சு நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டிலேயே தமிழகத்துக்கு வந்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் இயங்கி வரும் ஓம்ரான் நிறுவனத்தின் சி.இ.ஓக்களை அழைத்தே முதலீடுகளை பெற்றிருக்கலாம். 
 
அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளால் 35,000 பேருக்கு வேலை கிடைத்தது. ஆனால் திமுக அரசு நிலம் மானியம் அடங்க மறுத்ததால் பாக்ஸ்கான் நிறுவனம் குஜராத்துக்கு சென்று விட்டது. 
 
தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை வேறு மாநிலங்களில் செய்து வருகின்றன.  முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் என்ற மக்களின் காதில் பூசுற்றும் வேலையை உடனே நிறுத்த வேண்டும்.
 
தமிழ்நாட்டு தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் மற்றும் பள்ளி
 
Edited by Siva