ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (15:07 IST)

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் இப்போது இதுகுறித்த மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரம் பூர்வமாக மூடப்படும் கடைகளின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran