வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (13:04 IST)

ஸ்ட்ராங் ரூம் கேமராவில் கோளாறு.! தேர்தல் ஆணையம் கவனமாக இருக்க வேண்டும்.! எல்.முருகன் பேட்டி..!

Murugan
நீலகிரியில் ஸ்டார்ங் ரூம் கேமராக்கள் 20 நிமிடம் நின்றது தொடர்பாக கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை பிரச்சனை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
கோவை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், நேற்று நீலகிரி ஸ்டார்ங்ரூம் (strong room)  கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது என தெரிவித்தார். தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள் என்றும் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
 
கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று எல்.முருகன் கேட்டுக்கொண்டார். 
 
எந்தவித ஐயமும் இல்லாதவாரு தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும் என்ற அவர், பல இடங்களில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளது என்றும் இதில்  பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களின் பெயர்கள் அதிகளவில் விடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 
நீலகிரி, கோவை, தென் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திமுகவின் தோல்வியை மறைப்பதற்காக அவர்கள் எங்களுடைய வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள் என்று எல்.முருகன் குற்றம் சாட்டினர்.