செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

“அவரை அட்டாக் பண்ணி இருக்கணும்… அங்கதான் போட்டி எங்கள விட்டு போயிடுச்சு“ தோல்விக்குக் காரணம் சொன்ன ஹர்திக் பாண்ட்யா!

நேற்று மாலை நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு செய்தும் ரன்களை கட்டுப்படுத்த தவறியது. ஓபனிங் பேட்ஸ்மேனான ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் 27 பந்துகளில் 11 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை விளாசி 84 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் அதே அதிரடியைத் தொடர்ந்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஆக ஆனது.

இந்நிலையில் 258 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி பவர்ப்ளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்தடுத்து இஷான் கிஷன் (20), சூர்யகுமார் யாதவ் (26) அவுட் ஆனார்கள். திலக் வர்மா கடைசி வரை நின்று விளையாடி 63 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். இடையே ஹர்திக் பாண்ட்யா அடித்த் 46 ரன்கள், டிம் டேவிட்டின் 37 ரன்கள் அணியின் டார்கெட்டுக்கு உதவியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 247 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்குப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணிக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியும் த்ரில்லராக மாறி வருகிறது. முன்பெல்லாம் வெற்றி தோல்வியில் 2 ஓவர்கள் வித்தியாசமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் 2 பந்துகளாக ஆகிவிட்டது.  நாங்கள் இலக்கை எட்ட முயன்றோம். மிடில் ஓவர்களில் இன்னும் சில சிக்ஸர்களை அடித்திருக்க வேண்டும். அக்ஸர் படேலை அட்டாக் செய்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்