திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு துண்டு போட்டு வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 196 ரன்கள் சேர்த்த்து. அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்க்க,  தீபக் கூட 50 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  இதனால் 19 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 71 ரன்களும்,  துருவ் ஜுரெல் 54 ரன்களும் சேர்த்தனர். இந்த எட்டாவது வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி முதல் ஆளாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.