செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: செவ்வாய், 16 டிசம்பர் 2025 (20:44 IST)

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

vijay
தவெக தலைவர் விஜய் வருகிற 18ம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த பொதுக் கூட்டத்திற்கு பல கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருக்கிறார்கள். எல்லா இடத்திலும் சிசிடிவி கேமரா, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி ஆகியவை செய்யப்பட்டிருக்கிறது.

சிசிடிவி கேமரா வைத்து எல்லாவற்றையும் வீடியோவாக படம் பிடித்து கொடுக்க வேண்டும். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை எப்படி இருந்ததோ அதே போல திருப்பிக் கொடுக்க வேண்டும். குப்பைகள் இருந்தால் அதை சுத்தமாக்கி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீசார் விதித்திருக்கிறார்கள்.

பொதுக் கூட்டத்திற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேலைகள் அங்கு வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதோடு பொதுக்கூட்டம் தொடர்பான வேலைகளையும் அவர் மேற்பார்வையிட்டு வருகிறார்.

24 ஆம்புலன்ஸ், 72 மருத்துவர்கள், 120 செவிலியர்கள் தயாராக இருப்பார்கள் என தவெக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் 35 ஆயிரம் பேர் வரை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் 20 தண்ணீர் சின்டெக்ஸ் டேங்க், 20 ஏக்கரில் இருசக்கர பார்க்கிங், 60 ஏக்கரில் கார் பார்க்கிங், 20 இடங்களில் கழிவறைகள், மூன்று தீயணைப்பு வாகனங்கள், 40 வாக்கி டாக்கிங்கள் மற்றும் 40 கேமராக்கள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.