ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 முறை உயிரிழந்ததால் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு தமிழக போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும் பல கண்டிஷன் போடுகிறார்கள்.
இந்த மாதம் 5ம் தேதி சேலத்தில் விஜய் மக்களை சந்திக்க தவெக தரப்பில் அனுமதி கேட்டபோது தமிழக போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே புதுச்சேரி சென்று மக்களிடம் பேசினார் விஜய்.
ஒருபக்கம் வருகிற 18-ம் தேதி ஈரோட்டில் விஜய் மக்களை சந்திக்க தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் செய்து வந்தார். ஒருபக்கம் அந்த இடத்தில் அனுமதி கொடுக்கக் கூடாது.. அது அறநிலைத்துறைக்கு சொந்தமானது என விஜய் பேசவிருக்கும் இடத்தின் அருகே இருந்த கோயில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது.
எனவே ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நடக்குமா? நடக்காதா? என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் வருகிற 18-ம் தேதி விஜயின் மக்கள் சந்திப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது. அதேநேரம் 80 நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள்.
அதோடு அறநிலையத்துக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்த 50 ஆயிரம் ரூபாய் வாடகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையோடு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து வருகிற 18-ம் தேதி ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு நடப்பது உறுதியாகியுள்ளது.