வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2025 (10:57 IST)

தவெகவில் யார் யார் எந்த தொகுதியில் போட்டி?!.. முதல் வேட்பாளர் இன்று அறிவிப்பு!..

vijay
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறது. தனது தலைமையில் கூட்டணி என்பதை ஒப்புக்கொள்ளும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என விஜய் அறிவித்துவிட்டார். அதோடு தங்களோடு கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரம் இரண்டிலும் பங்கு கொடுக்கப்படும் என விஜய் முதல் மாநாட்டிலேயே தெரிவித்துவிட்டார்.

தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்கவில்லை. அதேநேரம் சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து அந்த கட்சிக்கு பலம் சேர்த்திருக்கிறார். மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் விரைவில் தவெகவில் இணைவார்கள் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

ஒரு பக்கம் தவெக தலைவர் விஜய் தனது மக்கள் சுற்றுப்பயணத்தை மீண்டும் துவங்கி விட்டார். சமீபத்தில் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். விரைவில் ஈரோட்டில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டு பேசவிருக்கிறார்.
ஒருபக்கம் தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் யார் யாரை போட்டியிட வைக்கலாம் என்கிற வேலைகளும் தவெகவில் துவங்கியிருக்கிறது.

இந்நிலையில் தவெக வேட்பாளர்கள் பட்டியல் இன்று முதல் வெளியாகும் என தெரிகிறது. முதல் வேட்பாளராக திருச்செங்கோட்டில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வேட்பாளராக நிற்கிறார் என சொல்லப்படுகிறது. இவர்தான் இந்த தொகுதி வேட்பாளர் என அந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்தும், செங்கோட்டையனும் நிர்வாகிகளுக்கு இன்று அறிமுகம் செய்யவிருக்கிறார்கள். இன்று காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியாக தவெக வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் மற்ற கட்சிகள் விருப்ப மனுவை பெற தொடங்கியுள்ள நிலையில் விஜய் சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டார் என்கிறார்கள். இது தவெகவினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.