ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...
தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் ஈரோட்டில் வருகிற 18ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் பொதுக்கூட்டம் பற்றிய பல தகவல்களை கூறினார்.
தலைவர் விஜய் ஈரோட்டுக்கு வருவது அரசியல்ரீதியாக மட்டுமில்லாமல் சமூக ரீதியாகவும் கவனத்தைப் பெறும். விஜய் வருகிறார் என்றால் தானாகவே கூட்டம் கூடும்.. அதுதான் அவரின் பலம்.. கர்ப்பிணி பெண்கள் முதியவர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம்.. அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என தலைவரே சொல்லியிருக்கிறார்.. கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அவர் சொல்லி இருக்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் ஈரோடு மாவட்டம் பெரியார் பிறந்த மண்.. எனவே அதுவே தனி பெருமை.. எனவே தலைவர் விஜய் அங்கு பரப்புரை செய்வது அவருக்கான அரசியல் புதிய பாதையை ஏற்படுத்தும்.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர், கழிப்பறை, மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் தயார் செய்யப்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் என்று அவர் கூறினார்.
ஒருபக்கம், எவ்வளவு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தாலும் விஜயின் தீவிர ரசிகர்கள் சில விஷயங்களை செய்வார்கள். பேனர் மீது ஏறி நிற்பது.. கரண்ட் கம்பத்தின் மீது ஏறுவது.. சுவர்களை தாண்டி உள்ளே வருவது போன்ற பல வேலைகளை செய்வார்கள்.
இதை தடுப்பதற்காக ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் உள்ள 40 அடி உயர விளம்பர பலகை மீது தொண்டர்கள் ஏற முடியாத வகையில் அதை முள் கம்பிகளால் சுற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த இடத்தில் தொண்டர் படையை சேர்ந்த 5 பேர் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.