திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (16:38 IST)

இந்த மூவரில் ஒருவர் தான் வேட்பாளர்.. எடப்பாடி பழனிசாமி முடிவு

ADMK
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக ஆட்சி மன்ற குழு விரைவில் கூடி முடிவேடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
மேலும் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்
 
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது
 
இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக தென்னரசு, ராமலிங்கம் மற்றும் நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவரை தான் களம் இறக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva