1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 ஜனவரி 2023 (11:52 IST)

இரட்டை இலை: சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு முறையீடு

Edappadi
இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது. 
 
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில் இடைக்கால நிவாரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இடை இரட்டை இலை சின்னம் கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முறையீடு செய்துள்ளது. 
 
இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் செய்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வழங்க முடியுமா என்பதை பார்க்கலாம் என்றும் தீர்ப்பு தாமதமாகும் பட்சத்தில் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran