சேலத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சியில் பேசிய இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஒரு செல்லாத நோட்டு என பேசியுள்ளார். அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வரும் நிலையில் அதிமுக உட்தகராறுகளை தவிர்த்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய...