1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2021 (11:37 IST)

சசிகலா வருகை: இன்று ஒபிஎஸ் - ஈபிஎஸ் முக்கிய ஆலோசனை!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே.
 
இதையடுத்து வருகிற 8ம் தேதி சசிகலா தமிழகம் வரவுள்ளார். இதனால் அவரது தொடர்கள் மிகுந்த ஏதிர்பார்ப்புடன் அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இதுகுறித்து இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஒபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை  கூட்டம் நடைபெறவுள்ளது.