வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2021 (08:14 IST)

அமித்ஷாவிடம் ஆசி பெற்ற ஓபிஎஸ் மகன்: என்ன சமாசாரமா இருக்கும்??

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

 
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவிந்திரநாத் தனது வெற்றிக்கு பின்னர் பாஜகவுடன் அதிக நெருக்கத்தை காட்டி வருகிறார். 
 
இந்நிலையில், ரவீந்திரநாத் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்... 
 
மதிப்புக்குரிய நம்முடைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். என்னுடைய பிறந்தநாள் அன்று அவரிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.