திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (16:23 IST)

பிரதமரை சந்தித்து ஆசி வாங்கிய ஓபிஎஸ்-ன் மகன்!

தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பி ஓபி ரவிந்தரநாத் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடியை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

தேனி தொகுதியில் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஓ பி ரவீந்தரநாத் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இப்போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். ஆனால் அவரின் நாடாளுமன்ற பேச்சுகள் எல்லாம் அவர் பாஜக எம்பியோ என்று சந்தேகப்பட வைக்கும் அளவில் இருக்கும். அந்த அளவுக்கு பாஜக கொண்டு வரும் சட்ட திருத்தங்களையும். மோடியையும் பாராட்டித் தள்ளுவார்.

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பிரதமரை அவரது அலுவலகம் சென்று நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதை அவரே அவரது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.