திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (21:48 IST)

இன்று ஒரே நாளில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் மகன்!

இன்று ஒரே நாளில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் மகன்!
துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் அதிமுக மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றதாக இன்று மதியம் தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் ரவீந்திரநாத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்ததாகவும் அவரிடம் ஆசி பெற்றதாகவும் இதுகுறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் 
 
இன்று ஒரே நாளில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் ஓபிஎஸ் மகன் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து ரவீந்திரநாத் குமார் பேசினாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை