1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (12:38 IST)

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ்: சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளை!

பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் நூதன முறையில் நகைகள் திருட்டு!
 
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற பிறகு ரெண்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அப்போது ஒரு கும்பல் நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு முதல் தளத்தில் நுழைந்து அங்கிருந்த நகைகளை  கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
 
திருடப்பட்ட நகைகள், அதன் மதிப்பு குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.