தங்கமணி வீட்டில் சோதனை - அதிமுகவினர் எதிர்ப்பு
தங்கமணி வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சென்னை உள்பட 69 இடங்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் ஏராளமான லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர்களது பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு உள்ளாகும் ஐந்தாவது அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், கேசி வீரமணி மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்துள்ளனர்.
இதனிடையே தங்கமணி வீட்டில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் சென்னை மற்றும் நாமக்கலில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் பொய் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டி கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.