வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (16:09 IST)

பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு வாதம்!

edappadi
பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என ஈபிஎஸ்தரப்பு நீதிமன்றத்தில் வாதம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுவை நடத்த கூடாது என ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த மனு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
இந்த விசாரணையின் போது பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பப்படியே முடிவு எடுக்கப்படும் என்றும் ஈபிஎஸ்தரப்பு தெரிவித்தது. அதற்கு ஓபிஎஸ் தரப்பு எந்த உறுப்பினரும் பொதுக்குழுவில் குரலெழுப்பும்போது என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும் என்று தெரிவித்து
 
இந்த நிலையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என நீதிமன்றத்தில் ஈபிஎஸ்தரப்பு வாதம் செய்தது. மேலும் திருத்தம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும் என்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்றும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்ற வாதம் செய்தது
 
அதுமட்டுமின்றி பொதுக்குழுவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அதுகுறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் ஈபிஎஸ் தரப்பு கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது