திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (13:00 IST)

அதிமுக பொதுக்குழு கூட்டம்; குவிந்த வழக்குகள்! – மொத்தமாக 3 மணிக்கு விசாரணை!

அதிமுக பொதுக்குழு கூட்டம்; குவிந்த வழக்குகள்! – மொத்தமாக 3 மணிக்கு விசாரணை!
நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதை எதிர்த்து தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரிக்கப்பட உள்ளன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்கு தடை மற்றும் கட்சி சட்டத்தில் திருத்தம் தேவை ஆகியவற்றை வலியுறுத்தி இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதை தொடர்ந்து தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழுவுக்கு தடைக்கோரி மனு அளித்துள்ளார். இந்த வழக்குகளை பட்டியலிடப்பட்ட வழக்குகளாக சேர்த்து இன்று பிற்பகல் 3 மணிக்கு மொத்த வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.