1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. EPS and OPS eat together in governor palace

ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட ஓபிஎஸ் & ஈபிஎஸ் – இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

ஈபிஎஸ்
அதிமுக வில் உட்கட்சி பூசல் நடந்து ஓபிஎஸ் அணி ஈபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளனர்.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்த முடிவால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் வெடித்து, இரு அணிகளாக பிரிந்தனர். இருவரும் மாறி மாறி மற்றவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனால் அதிமுக சம்மந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில் எதிர்க்கட்சி தலைவர்களாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இருவரும் ஒரே மேஜையில் அருகருகே அமர்ந்து உணவு உண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
About Writer
vinoth