திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 ஜனவரி 2023 (17:35 IST)

பதவியை குறுக்கு வழியில் பெற இபிஎஸ் முயற்சி: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

ops eps
பொதுச் செயலாளர் என்ற பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் செய்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று 2-வது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது ஓபிஎஸ் தரப்பில் வாதம் செய்தபோது, ‘ பொதுச் செயலாளர் பதவியை குறுக்கு வழியில் பெற எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார் என்றும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவது என்றும் தெரிவிக்கப்பட்டது
 
அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் மட்டுமே என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு வசதியாக கட்சி விதிகளில் திருத்தம் செய்து உள்ளார் என்றும் வாதிடப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை தொடரும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது
 
Edited by Siva