1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Engineering colleges make second counselling

பொறியியல் கல்லூரிகளில் சேர 2ம் கட்ட கலந்தாய்வு! – உயர்கல்வித்துறை அனுமதி!

Tamilnadu
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள விடுபட்ட இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் வழக்கத்தை விட குறைவான மாணவர்களே கலந்தாய்வில் கலந்து கொண்டனர். பல பொறியியல் கல்லூரிகளில் மொத்த சீட்டுகளில் பாதியளவு கூட அட்மிசன் கிடைக்காமல் போனது.

இந்நிலையில் ஏற்கனவே நடந்த கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கப்பட்டும் கல்லூரியில் சேராத மாணவர்களின் இடங்கள், கல்லூரியை விட்டு விலகியவர்களின் இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த தமிழக உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி போடுங்க... டிவி, ஃப்ரிட்ஜ் வெல்லுங்க..! பீகாரில் அசத்தல் அறிவிப்பு