1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomato price down and come to usual

கிடுகிடுவென விலை குறைந்த தக்காளி! – கிலோ ரூ.35க்கு விற்பனை!

Tamilnadu
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று கிடுகிடுவென விலை குறைந்துள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் உள்ளூர் சந்தைகளில் தக்காளி வரத்து குறைந்ததால் கிடுகிடுவென விலை உயர தொடங்கியது. இதனால் அதிகபட்சமாக தக்காளில் விலை கிலோ ரூ.150 ஐ தாண்டி விற்றதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் பசுமை பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தக்காளி விலை ரூ.100 வரை விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையாகி வருகிறது. இந்த விலை குறைவால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
இன்றும் தங்கம் விலை உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்!