வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 நவம்பர் 2021 (10:52 IST)

ஆதரவற்ற பெண்களுக்கு இலவச ஆடுகள் - அரசாணை வெளியீடு!

கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

 
ஆம், ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவேராக மாற்ற இலவசமாக 5 ஆடு வழங்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 38,000 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் தர ரூ.76 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலா ஐந்து ஆடுகள் என 1,94,000 ஆடுகள் வாங்க நிதியை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.
 
மேலும் இதனை பெருவதற்கான  தகுதியுடையவர்களாக யார் யார் இருப்பார்கள் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. பயனாளிகளில் குறைந்தது 30 % எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் 
2. நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் 
3. ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் 
4. பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது