திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:25 IST)

பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு!

பொறியியல் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் தேதி  குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என்றும், குறிப்பாக பி.இ., பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி ஆகிய பாடப்பிரிவு வகுப்புகளுக்கு, ஆகஸ்ட் 21ஆம் தேதி மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கல்லூரிகளுக்கு செல்ல மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Edited by Siva