ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:51 IST)

மருத்துவ மாணவி கொலை: ராஜினாமா செய்த முதல்வருக்கு இன்னொரு கல்லூரியில் வேலை..!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் இன்று அவருக்கு மற்றொரு கல்லூரியில் வேலை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் என்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியில் முதல்வர் சந்திப் போஸ் என்பவர் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் தேசிய மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்த கல்லூரிக்கு இன்று காலை அவர் வருகை தந்ததை அடுத்து மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜினாமா செய்த 24 மணி நேரத்தில் இன்னொரு கல்லூரிக்கு முதல்வராக சந்திப் போஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Edited by Mahendran