வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (14:36 IST)

மீனம்பாக்கத்தில் வேகமாக கார் ஓட்டிய கல்லூரி மாணவன்.. பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்து..!

Accident
சென்னை, மீனம்பாக்கம் அருகே அதிவேகமாக கார் ஓட்டி வந்த கல்லூரி மாணவர், பள்ளி மாணவர்கள் மீது மோதி பெரும் விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, மீனம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் காரை அதிவேகமாக ஓட்டி வந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது மோதிவிட்டார். இந்த விபத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்து உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கல்லூரி மாணவரை பிடித்து தாக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவர் குடிபோதையில் இருந்தாரா? ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தாரா? போன்ற கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran