1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Engineering college counselling date announcement

பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..!

Ponmudi
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு என்றும், ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது என்றும்,  28ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்று கலந்தாய்வு என்றும்,  ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 22ம் தேதி வரை 2ம் சுற்று கலந்தாய்வு என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ;தெரிவித்துள்ளார். 
 
ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை 3வது கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு முடிக்கப்படும் என்றும், அதேபோல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன் முடிக்கும்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி: நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு..!