1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 ஜூலை 2023 (11:19 IST)

பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு: அமைச்சர் பொன்முடி தகவல்

முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் சமூக நீதி வரலாறு குறித்த பாடங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கப்படும் என அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார். 
 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அதில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். இதில் அவர் பேசியபோது ’சமூக நீதிக்காக பாடுபட்ட கருணாநிதி ஆற்றிய தொண்டுகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருணாநிதி குறித்த சமூகநீதி வரலாறு பாடத்திட்டம் இணைக்கப்படும் என்றும் இதற்கான பாடத்திட்டங்கள் உருவாக்க ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார் 
 
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இடம் ஆலோசனை நடத்த உள்ளோம் என்றும் கருணாநிதி குறித்த கட்டுரை கவிதை போட்டிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
சமூக நீதி குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர்களுக்கு அதை தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
 
Edited by Siva