1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. encourageous do not get tensed Director Amir advice

தைரியமாக இருங்கள், பதற்றப்படாதிருங்கள் ! - ’இயக்குநர் அமீர் ’அறிவுரை

encourageous
இன்று பிளஸ் 2 மாணவர்களுகான தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் 91 % சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் அடுத்த கட்ட படிப்புக்காக தங்களை தயார் படுத்திக்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் அமீர் மாணவர்களுக்காக ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
அதில் அவர் கூறியுள்ளதாவது :
 
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வந்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.உங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அதேபோல் தேர்வில் தோல்வி அடைந்தாலோ. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலோ யாரும் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதற்காகத்தான் இந்த வீடியோ.

கல்வி வாழ்க்குக்கு துணைதான். அதே கல்வி மட்டும்தான் வாழ்க்கையில் உயர்ந்தனர் என்று கூறமுடியாது. தேர்வில் தோல்வி அடைந்தால் தைரியமாக இருங்கள், பதற்றப்படாதிருங்கள். எதுவும் விட்டுப்போகவில்லை. பெற்றோர்களே பிள்ளைகளிடம் அன்பாக, நண்பனாக இருங்கள் என்றும், அற்ப விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள். இவ்வாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
வருமான வரி செலுத்தவில்லை என்றால் என்னவாகும்?