1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (10:38 IST)

போலீஸ் ஸ்டேசனில் கைதியை தாக்கிய பிரபல தலைவர் : பரவும் வீடியோ

திரிபுரா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் பிராத்யாட் தேவ் பர்மன் என்பவர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார்.  இவர் காவல் நிலையத்துக்குள் நுழைந்த அவர் கைதியை சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி  வருகிறது.
கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிராத்யாட் தேவின் சகோதரியான ப்ரக்யா பர்மன் போட்டியிடுகிறரர். அவர் தேர்தலுகான பிரசாரத்தில் ஈடுபட்டபோது பிரக்யாவின் கார் மீது ஒருவர் கல் எறிந்தார். 
 
இதனையடுத்து கல் வீசிய நபர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
 
இந்நிலையில் பிராத்யாட் காவல்நிலையத்து வந்தார். அங்கிருந்த கைதியை போலீஸ் ஸ்டேசன் என்று கூட பாராமல் கன்னத்தில் பளார்.. பளார் என்று அடித்தார். இந்த வீடியோ சமூக வலையத்தில் பரவியதை அடுத்து பாஜகவினர் இதுகுறித்து காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார்.