வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (10:27 IST)

Mr.லோக்கல் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோக்ரீன் புரடொக்சன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக வெளிவந்த இந்த படத்தின் விளம்பத்தில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இல்லை. எனவே இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது
 
இந்த நிலையில் Mr.லோக்கல்' திரைப்படம் வரும் மே 17ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகுமென சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே மே 17ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த 'கொலைகாரன்' உள்ளிட்ட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா? என்பது இனிமேல் தான் தெரியும்
 
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கார்த்தி, ஆர்யா, ஜீவா, உதயநிதி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது