வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (09:14 IST)

மக்கள் மனங்களில் நான் இருக்கிறேன்; வெற்றி வாய்ப்பு பிரகாசம் – பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி !

நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று வாக்களித்த பின தனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் புத்தாண்டு அன்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாகவும்  தன்னை மதச்சார்பற்ற கட்சிகள் யாவும் பொது வேட்பாளராக அறிவித்து ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள்  ஆதரவு அளித்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் மட்டுமே பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு அளிக்க முடியும் எனக் கூறி காங்கிரஸ் மறுத்துவிட்டது.

இதையடுத்து பிரகாஷ்ராஜ சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கினார். அவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பெங்களூர் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதையடுத்து பிரகாஷ் ராஜ் தான் படித்த பெங்களூரு செயின்ட் ஜோசப்ஸ் பாய்ஸ் ஹை ஸ்கூலில் வாக்களித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ மக்கள் மனங்களில் நான் உள்ளேன். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனக்கு எதிராகப் போலியாக பரப்புரை  செய்தவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்’ எனக் கூறினார்.