1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Employee captured video while women players take bath

சென்னையில் விளையாட்டு வீராங்கனையை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது

basket ball
சென்னையில் தற்போது தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கூடைப்பந்து அணிகளின் வீராங்கனைகள் வந்துள்ளனர்

இந்த நிலையில் உத்தரகாண்ட் மகளிர் அணியினர் தங்கியிருந்த ஒரு ஓட்டலில் வாலிபர் ஒருவர் வீராங்கனைகள் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அலாவுதீன் உசேன் என்பதும், அவர் ஒரு கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அலாவுதீனை போலீசார் ஆஜர் செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அலாவுதீன் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அடுத்து வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஓட்டல்களில் பாதிகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று வீராங்கனைகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அர்ஜூன் சம்பத் அடுத்த சங்கராச்சாரியரா? திடுக்கிடும் தகவல்