வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2018 (14:36 IST)

சென்னை ரயில் ஏசி பெட்டியில் பாம்பு; பயணிகள் அதிர்ச்சி

கோவையில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஏசி வசதி கொண்ட பெட்டியில் படுக்கையின் கீழ் பதுங்கியிருந்த பாம்பால்,  ரயிலில் பயணித்த பயணிகள் பீதி அடைந்தனர்.
கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான சேரன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12674) வழக்கம்போல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடையவிருந்தபோது பி-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர் அவரது உடைமைகளை எடுக்க முயன்றார். அப்போது படுக்கையின் கீழ் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததைக் கண்ட அவர், மரண பயத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகளும் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர்.
 
பயணிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்த நிலையில், போலீஸார் வருவதற்குள் ரயில் நிலையமே வந்துவிட்டது.  இது குறித்து சென்னை பிரிவு ரயில்வே மேலாளர் கூறியதாவது ரயில் பெட்டியில் இருந்த பாம்பை அப்புறப்படுத்திவிட்டோம். ஆனால் அந்த பாம்பு எப்படி ஏசி ரயில் பெட்டிக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.