1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2018 (14:03 IST)

சென்னை எனது இரண்டாவது வீடு; தல தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை காலம் நிறைவடைந்ததை அடுத்து, இது குறித்து பேசிய அணியின் கேப்டன் தோனி, சென்னை தான் தனது இரண்டாவது வீடு என கூறியுள்ளார்,
ராஞ்சியைச் சேர்ந்த மஹேந்திர சிங் தோனி பல்வேறு இன்னல்களுக்கு இடையே, தனது தனித் திறமையாலும், இக்கட்டான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுப்பதாலும் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்  உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில், தோனியின் தலைமையிலான சென்னை அணி(சென்னை சூப்பர் கிங்ஸ்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது. 
 
இரண்டு ஆண்டுகள் தடைக்காலம் நிறைவடைந்து, வரும் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவிருக்கும் சென்னை அணியின் கேப்டனான தல தோனி, சென்னை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.  தடைக்குப் பின்னர் தற்பொழுது களமிறங்க போகும் சென்னை அணி, வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்த முறை கோப்பையை பெறுவோம் என்று  தெரிவித்துள்ளார்.
 
இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பங்கேற்கவில்லை என்றாலும், சென்னை அணியின் மதிப்பு குறையவில்லை. இதுவே சென்னை அணியின் மிகப்பெரிய பலமாகும். சென்னை அணிக்கு தமிழ்நாடு உட்பட பல நாடுகளில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. சென்னை மக்களின் அன்பு தனித்துவமானது என்றும் சென்னை தான் தனது இரண்டாவது வீடு என்றும் அவர் கூறியுள்ளார்.