தொடர்புடைய செய்திகள்
- ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம்: தமிழக அரசு அதிரடி
- இனி ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலை இயங்காது: முதல்வருக்கு கனிமொழி நன்றி!
- இதுக்குமேல ஸ்டெர்லைட்ல ஆக்ஸிஜன் உற்பத்தி அவசியமில்லை – தமிழக அரசு வாதம்!
- ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் எவ்வளவு? அறிக்கை அனுப்ப உத்தரவு!
- ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு
ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சார இணைப்பு துண்டிப்பு: நிரந்தரமாக மூடப்படுகிறதா?
ஸ்டெர்லைட் ஆலைக்கு நேற்று முதல் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தபோது சுப்ரீம் கோர்ட்டு அனுமதி காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதியுடன் அந்த அனுமதி முடிவடைந்தது
இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக அரசு அதிரடியாக ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்க முடியாது என்று கூறியது
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் சப்ளையை நிறுத்தி நிலையில் தற்போது மின்சார சப்ளையையும் தமிழக அரசு நிறுத்தியுள்ளது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மேலும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையை இயங்க விடமாட்டோம் என ஏற்கனவே தமிழக முதல்வர் உறுதியாக கூறியுள்ளார் என்பது தெரிந்ததே
அடுத்த கட்டுரையில்
