திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஜூலை 2021 (20:36 IST)

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் எவ்வளவு? அறிக்கை அனுப்ப உத்தரவு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாகவும் இதன் காரணமாக பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன 
 
குறிப்பாக சென்னை அரசு மருத்துவமனைகளிலேயே ஆக்சிஜன் படுக்கை இல்லாமல் ஆம்புலன்ஸில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் கொரோனா பரவலின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோர் பட்டியல் அடங்கிய விரிவான அறிக்கையை உடனடியாக அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஆகஸ்ட் 13-ஆம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஆக்சிஜனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது