1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

நாளை வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் இறுதிக்கட்ட ஏற்பாடு!

தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் இறுதிகட்ட ஏற்பாடுகளை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சீட்டுகள் அனுப்பும் பணிகள், தேர்தல் அதிகாரிகளை அனுப்பி வைக்கும் பணிகள் உள்பட அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க முறைகளும் விளக்கம் சொல்லப்படும் என்றும் கூறப்படுகிறது
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் இதற்கான இறுதிகட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது